நாடு திரும்ப போராட்டம் நடத்திய இலங்கையர் மீது ஜோர்டானில் கண்ணீர்ப்புகை தாக்குதல்!

ஜோர்டானில் வேலையிழந்து சிக்கியுள்ள இலங்கை பணியாளர்கள் மீது, ஜோர்டானிய பொலிசார் கண்ணீர்ப்புகை வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்டானில் உள்ள அல்கரா கேமல்வெல்க தொழிற்பேட்டையில் பணியாற்றிய, சுமார் 500 இலங்கையர்கள் கொரோனா தொற்றுநோய் பரவியதால்  வேலையிழந்திருந்தனர்.

நாடு திரும்ப முடியாமலிருந்த அவர்கள், ஜோர்டானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாட சென்றபோது இந்த நிலைமை எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட இலங்கை பணியாளர்கள் தமக்கு முறையான தீர்வு கிடைக்கவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, பொலிசார் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டனர்.

இலங்கையர்களின் பிரச்சினை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டது, தூதரகத்தின் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்டதல்ல என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விளக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here