நீதிபதி இளஞ்செழியனின் நெகிழ்ச்சி செயல்: உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளிற்கு மோட்டார் சைக்கிள் அன்பளிப்பு!

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீண்டும், சிங்கள சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்காகியுள்ளார்.

யாழ்ப்பாண மேல் நிதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் கடமையாற்றியபோது எதிர்பாராத அனர்த்தம் ஒன்றில், துப்பாக்கிச்சூட்டில் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் ஜி.எச்.சரத் ​​ஹேமச்சந்திர கொல்லப்பட்டிருந்தார்.

ஜூலை 23ஆம் திகதி அவரது 3வது ஆண்டு நினைவுநாள்.

மெய்ப்பாதுகாவலர் கொல்லப்பட்டதும், அவரது பிள்ளைகளை தந்தையாக இருந்து பராமரிப்பேன் என குறிப்பிட்டு, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 23ஆம் திகதி அவரது நினைவு நாளை முன்னிட்டு, மெய்ப்பாதுகாவலரின் சிலாபம் இல்லத்திற்கு இளம்செழியன் சென்றிருந்தார்.

அங்கு நினைவுநாளை முன்னிட்டு தானம் வழங்கப்பட்டது.

இதன்போது, உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இரண்டு பிள்ளைகளிற்கும் இளஞ்செழியன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here