தென்னாபிரிக்காவை நசுக்கியது இலங்கை!

தொடர் தோல்விகளின் பின்னர் உத்வேகமான வெற்றியொன்றை இலங்கை பெற்றிருக்கிறது. தென்னாபிரிக்கா அணிக்கெதிரான 5வது ஒருநாள் போட்டியில் 178 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. அகில தனஞ்ஜெய கைப்பற்றிய ஆறு விக்கெட்டுக்கள் இலங்கையின் பெரிய வெற்றிக்கு உதவியது.

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது. தனது துடுப்பாட்ட முறையில் மாற்றத்தை செய்துள்ள டிக்வெல்ல 43 ஓட்டங்களை பெற்றார். குஷல் மென்டிஸ் 38 ஓட்டங்களை பெற்றார். மத்யூஸ் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும், பின் வரிசையில் டசுன் சானக 21 ஓட்டங்களையும் பெற்றனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை இலங்கை பெற்றது. பந்துவீச்சில் முல்டர், புலவேகயோ தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

300 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்காவின் தொடக்க வீரர் ஹசிம் அம்லா டக் அவுட் ஆனார். அதை தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்ந்தன. டிகொக் 54 ஓட்டங்களையும், அடுத்த அதிக ஓட்டங்களாக மார்க்ரம் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

அகில தனஞ்ஜெய 9 ஓவர்கள் வீசி 29 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாகவும் அவரே தெரிவானார்.

எனினும், 3-2 என தென்னாபிரிக்கா தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here