பல வருடங்களாக கடிதமே வராத மலையக கிராமம்!

கண்டி, ஸ்டெலன்பேர்க் பேர்க், கந்தலா தோட்ட மக்கள் தபால் வசதி கூட இல்லாமல் சிரமப்படுகிறார்கள். அங்குள்ள மக்களிற்கு அனுப்பப்பட்ட கடிதங்கள், வருடக்கணக்கில் தேங்கிக் கிடக்கிறது.

கம்பளை தேர்தல் தொகுதியில்- கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் எல்லையில் இந்த தோட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள 3 தோட்டப்பிரிவகளிலும் 1,000இற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அதிக கஸ்டப் பகுதியான இந்த பகுதி மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய 12 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள புஸல்லாவ நகரத்திற்குத்தான் செல்ல வேண்டும். எனினும், சீரான பாதை வசதியில்லை. ஒரு வழிப்பயணத்திற்கான கட்டணம் 100 ரூபா.

இந்த பகுதியிலிருந்து 7 கிலோமீற்றர் தொலைவிலுள்ள புப்புரஸ்ஸ நகரத்தில் அனைத்து பொருட்களையும் வாங்க முடியாது. அத்துடன் வங்கி வசதியும் கிடையாது.

பிரதான தபாலகம் புப்புரஸ்ச நகரிலிருந்து 7 கிலோமீற்றர் தொலைவிலுள்ளது. தோட்டத்த்தை விட்டு வெகு தொலைவில் தபாலகம் அமைந்திருந்ததால், தோட்ட மக்களின் நலன்கருதி உபதபாலகம் ஒன்று 16 வருடங்களின் முன்னர் திறக்கப்பட்டிருந்தது.

ஒரு வருடம் மட்டுமே அது இயங்கியது. கடந்த 15 வருடங்களாக அது மூடப்பட்டுள்ளது. இதனால் தோட்ட மக்களிற்கு வந்து சேர வேண்டிய கடிதங்கள் புப்புரஸ்ச தபாலகம், டெல்டா தேயிலை தொழிற்சாலை, தோட்ட மடுவம் ஆகிய இடங்களில் வருடக்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன.

நேர்முக தேர்வு அழைப்புக்கள், தொழில்நியமன கடிதங்கள், பரீட்சை அனுமதி அட்டைகள் உள்ளிட்ட முக்கிய கடிதங்கள் வந்து சேராததால் இளையவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது. பதிவுத்தபால்கள் திரும்பிச் சென்ற விடுகின்றன.

அந்த பகுதியில் 6 மாதமே தொழிலாளர்களின் வருமானத்திற்கு உத்தரவாதமான காலம். மிகுதி 6 மாதம் வருமானம் குறைவாக இருக்கும். இந்த சமயத்தில் நகைகளை அடகு வைத்து வாழ்க்கையை நடத்தும் அவர்கள், அடுத்து 6 மாதத்தில் மீட்பார்கள். இப்படி சுற்றுவட்டமாக இயங்கும் வாழ்க்கையில், கடிதம் வராமல் விட்ட பின்னர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடகு நிலைய அறிவித்தல்கள் வந்து சேராததால், பலரது நகைகள் இழக்கப்பட்டு விட்டது.

அரசியல்வதிகளும், அதிகாரிகளும் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வை பெற்றுத்தருவார்களா என அந்த பகுதி மக்கள் காத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here