கூட்டமைப்பிற்கு வேட்பாளர்களிற்கு விருந்து வைத்த சுவிஸ் தூதர்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் சிலரை இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதர் இன்று மதியம் சந்தித்து பேசினார்.

நட்பினடிப்படையிலான இந்த சந்திப்பில், கூட்டமைப்பினருக்கு தூதர் மதிய போசன விருந்தளித்தார்.

யாழ் நகரிலுள்ள ஜெட்விங் ஹொட்டலில் இந்த சந்திப்பு நடந்தது.

தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், பா.கஜதீபன் உள்ளிட்ட சிலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தேசிய அரசியல், தமிழ் அரசியல் சூழ்நிலைகள் குறித்து கூட்டமைப்பினரிடம் தூதர் கலந்துரையாடினார்.

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் குறித்தும் கூட்டமைப்பினர் கேட்டறிந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here