சொல்வதை கேட்காவிட்டால் கொன்று விடுவேன் என பிரபாகரனிற்கு இரகசிய செய்தி அனுப்பினேன்: மஹிந்த போடும் புதுக்குண்டு!

அமைதித் தீர்வை காண்பதற்காக  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுக்களை மேற்கொள்ள முன்வந்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக அவரை கொல்லவேண்டியநிலையேற்பட்டது- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“2006 இல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரபாகரனிற்கு நான் செய்தியொன்றை அனுப்பினேன்.

நாங்கள் தீர்வை காண்பதற்காக நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம்.  நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் எனத் தெரிவித்திருந்தேன்.

நாங்கள் பேச்சுக்களில் ஈடுபடுவோம். அப்பாவிகளை கொல்லவேண்டாம், படையினரை தாக்கவேண்டாம், நீங்கள் இதனை நிறுத்தாவிட்டால் உங்களை கொல்லவேண்டியிருக்கும் எனவும் அதில் தெரிவித்தேன்.

அதற்கு பிரபாகரனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. கொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள், படையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன“ என்று மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here