கடலட்டை பிடிப்பதற்கு எதிரான சுமந்திரனின் வழக்கு ஒத்திவைப்பு!

வடமராட்சி பகுதியில் கடலட்டை மற்றும் தொழில்களில் ஈடுபடுவதை நிறுத்தக் கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஏம்.ஏ.சுமந்திரனால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று வழக்கு தவணையின்போது, நீரியல் வளத்துறை திணைக்களம் அதிகாரிகள், சமூகமளிக்காத காரணத்தாலும் இன்றத்திற்க்கு மாற்றம்பட்ட நிலையில் இன்றும. நீதவான் விடுப்பில் சென்றுள்ளமையாலும் நீரியல் வளத்துறை திணைக்களம் அதிகாரிகள் சமூகமளிக்காதமையாலும் மீண்டும் எதிர்வரும் வியாழக்கிழமை பிற்போடப்பட்டிருக்கிறது.

சட்டவிரோத கடலட்டை தொழிலுக்கு எதிராக கடந்த வருடம் பருத்தித்துறை நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும், இந்த வருடமும் மீளவும் கடலட்டை பிடிப்பவர்கள் பருத்தித்துறையில் முகாமிட்டுள்ளவர்களை அகற்றக்கோரி, கடந்த 22ஆம் திகதி எம்.ஏ.சுமந்திரன் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இன்று மீள வழக்கு தவணையிடப்பட்ட நிலையில், மீளவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here