வீட்டில் பெருமளவு போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த வவுனியா யுவதி கைது!

போதைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வவுனியாவில் இளம் யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது துணைவர் என குறிப்பிடப்படும் ஒருவரும் கைதாகியுள்ளார்.

வவுனியா மடுகந்தை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய, நேற்று இரவு வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அந்த வீட்டில் இருந்த 24 வயதான இளைஞனும், 25 வயதான யுவதியும் கைதுசெய்யப்பட்டனர்.

1.05 கிலோகிராம் கேரளா கஞ்சாவும், 2 கிராம் 60 மில்லிகிராம் கெரோயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட யுவதியும், இளைஞனும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here