மட்டக்களப்பில் 3 பழைய தமிழ் எம்.பிக்களும் அவுட்: அதிர்ச்சியளிக்கும் உளவுத்துறை அறிக்கை!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் எம்.பிக்கள் 3 பேரும் மண் கவ்வுவார்கள் என தேசிய உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தல் தொடர்பில் நாடளாவிய ரீதியில் தேசிய உளவுத்துறையின் கணிப்பீட்டு அறிக்கை வழங்கப்படுவத வழக்கம். இம்முறை உளவுத்துறை வழங்கிய அறிக்கையில் கிழக்கு விவகாரம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

கிழக்கில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் 3 புதிய முகங்கள் தெரிவாகுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெலோவின் கோவிந்தன் கருணாகரம், சாணக்கிய ராகுல் வீரபுத்திரன், எம்.உதயகுமார் ஆகியோர் தெரிவாகுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பிள்ளையான் மற்றும் முஸ்லிம் ஒருவரும் தெரிவாகுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அல்லது அமீர் அலி தெரிவாகலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 60 வீதமான வாக்கையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 24 வீத வாக்கையும், ஐக்கிய மக்கள் சக்தி 7 வீத வாக்கையும் பெறுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் கணிப்புக்கள் தொடர்பான உளவத்துறை கணிப்புக்கள் மிகச்சரியாக அமையுமென்றும் சொல்ல முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here