வைத்தியசாலைக்குள் கைதான போலி வைத்தியருக்கு விளக்கமறியல்!

வத்துபிட்டிவல வைத்தியசாலைக்குள் வைத்தியர் போல வேடமிட்டு நுழைந்த நபரை, எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் அவர் வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலைக்குள் வைத்தியர் போல வேடமிட்டு நுழைந்தார். வைத்தியசாலையின் பெண்கள் விடுதியில் அவர் நுழைந்தபோது, நோயாளர்களை பார்வையிடும் நேரம் முடிவடைந்திருந்தது. நோயாளியொருவரை பார்வையிட வந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

அவரில் சந்தேகமடைந்த வைத்தியசாலை ஊழியர்கள், பொலிசாரிடம் அறிவித்தனர்.

நிட்டம்புவ பொலிசார் அவரை கைது செய்தனர். எனினும், வைத்தியர் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரம் அவரிடமிருக்கவில்லை.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இந்தியர் என்பது தெரிய வந்தது. இலங்கையர் ஒருவரை மணந்து, சில வருடங்களாக இலங்கையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here