இன்று சிஐடியில் முன்னிலையாகும் ரிஷாட்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வாக்குமூலமளிக்க முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (27) சிஐடியில் முன்னிலையாகிறார்.

சிஐடியின் வேண்டுகோளைத் தொடர்ந்து, பதியுதீனை சிஐடி முன் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் முடியும் வரை ரிஷாத் பதியுதீனின் விசாரணையை நிறுத்தி வைக்குமாறு சிஐடியிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருந்தது.

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டால், மற்ற சந்தேக நபர்கள் அநியாயமாக நடத்தப்படுவார்கள் என்று ஐ.ஜி.பி தேர்தல் ஆணையத் தலைவருக்கு அறிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here