முன்னாள் இலங்கை அழகி சொத்துக்களிற்காக மருத்துவ உதவி தடுக்கப்பட்டு கொல்லப்பட்டாரா?

முன்னாள் இலங்கை அழகி ஜெனிபர் இங்க்லெட்டனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது உறவினர்கள் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

1962ஆம் ஆண்டில் இலங்கை அழகியாக தெரிவானவர் ஜெனிபர் இங்க்லெட்டன். கணவன் காலமான பின்னர், இலங்கையில் தனித்து வாழ்ந்து வந்த அவர் அண்மையில் உயிரிழந்திருந்தார்.

அவரது சகோதரர் டோனி ஹாக் பிரித்தானியாவில் வசிக்கிறார். அவர் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டதுடன், இது குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரியை பராமரித்த நபர், சொத்துக்களை பெறுவதற்காக தனது சகோதரிக்கு மருத்துவ உதவிகள் கிடைக்காமல் தடுத்து வைத்திருந்ததாகவும், அதன்மூலம் அவர் கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

சரியான கவனமும் சிகிச்சையும் அளிக்கப்பட்டிருந்தால் ஜெனிபர் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.

அந்த நபர் ஜெனிபருடன் தனது நடன வகுப்புகள் மூலம் நட்பு கொண்டிருந்ததாக டோனி ஹாக் கூறுகிறார்.

கடந்த ஆண்டு ஜெனிபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு,
ஜெனிஃபர் அவுஸ்திரேலியாவில் உள்ள அவரது குடும்பத்தினரையும் அவரது நண்பர்களையும் சந்திப்பதில் இருந்து பராமரிப்பாளர் அந்நியப்படுத்தியிருந்தார்.

ஜெனிஃபரை மருத்துவர் பரிசோதிக்கக் கூட அந்த நபர் அனுமதிக்கவில்லை என்று ஹாக் சந்தேகிக்கிறார்.

ஜெனிபர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறி, மொபைல் ஃபோனைப் பயன்படுத்தவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் செய்யவோ அல்லது தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அனுமதிக்கப்படவில்லை.

ஜெனிஃபரின் சொத்துக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அந்த நபர்  இப்போது கூறுவதாக உறவுகள் கூறுகின்றன.

ஜெனிபரின் சொத்துக்கள் பரிமாறுவது குறித்த ஆவணம் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாக சட்டத்தரணி இயன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜெனிபரின் அசையா சொத்துக்கள் குறித்து, காணிப் பதிவேட்டிலிருந்து ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகவும் குற்றம்சுமத்தியுள்ளனர்.

இந்த விவகாரங்கள் குறித்து, பொரளை பொலிசாரிடம் முறைப்பாடு  அளித்துள்ளதாகவும், பொதுமக்கள் அவரை 0722251749 -0112432097 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு அல்லது பொiள பொலிசாரை  தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்வகவும் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here