நாளைய பாடசாலை செயற்பாடு குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அறிவித்தல்!

நாளை (27) திங்கட்கிழமை ஆரம்பமாகும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சமூகமளிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கமைவாகவே அதிபர்கள் செயற்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

இதன்படி 11.12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான ஆசிரியர்கள் மாத்திரமே நாளை (27.7.2020) திங்கட்கிழமை முதல் வரும் வாரத்தில் சமூகமளிக்க வேண்டும். இதர ஆசிரியர்கள் அனைவரும் ஓகஸ்ட் 10 ம் திகதிக்கு பின்னரே பாடசாகைளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் கல்வியமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதற்கு மாறாக சில அதிபர்கள் அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைக்கு கட்டாயம் வரவேண்டும் என ஆசிரியர்களை அழைப்பது முற்றிலும் தவறான செயல்.

பாடசாலைகளில் ஒன்று கூடுதலை தவிர்ப்பதற்காகவும் சமூக இடைவெளியை பேணுவதற்காகவும், பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காகவே கல்வி அமைச்சு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப கல்வி அமைச்சின் தீர்மானமே இது.

11,12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு கற்பிக்க நேர அட்டவணை வழங்கப்பட்ட ஆசிரியர்கள் மாத்திரமே நாளை பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். இம்மாதம் 6 ம் திகதி பாடசாலைகள் ஆரம்பித்தபோதிலும் கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத சூழ்நிலை காணப்பட்டது. எனவே கல்வி அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய பாடசாலைகளை நடத்துவதற்கான அவசியமான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு  நாங்கள் கல்வி அமைச்சிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here