விவசாயிகளின் குரல் மேலோங்க வேண்டும்!

என் கனவு யாழ் செயல் திட்டத்தில் விவசாயத்தை முக்கியபடுத்திய காரணம் விவசாயிகளின் குரல் இன்னமும் மேலோங்க வேண்டும் என்று முன்னாள் விவசாயப் பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார் .

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“என் கனவு யாழ்” செயல் திட்டத்தில் விவசாயத்தை முக்கியபடுத்திய காரணம் விவசாயிகளின் குரல் இன்னமும் மேலோங்க வேண்டும்.

அந்த அடிப்படையில் விவசாயத்தின் மூலம் எமது எதிர்காலத்தை பொருளாதாரம் மூலமாக முன்னேற்றம் அடைய வைக்க வேண்டும்.

மற்றைய பிரதேசங்களில் கிடைக்கும் வசதிகள் எம் விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். எமக்கான சரியான உற்பத்தி விலை, மாற்று சந்தைகள் கிடைக்க வேண்டும். அதே நேரம் விவசாய தொழில்மயமாக்கங்கள் உருவாக்கபட வேண்டும்.

விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல் விவசாய கூலியாக வேலைசெய்பவர்கள் என அனைவருக்கும் இந்த முன்னேற்றம் வர வேண்டும். அவர்களுக்கான குடும்பங்களுக்கள் நல்ல முன்னேற்றகரமான நிலைக்குவர வேண்டும். அவர்களுடைய பிள்ளைகளுக்கு தரமான கல்வியை பெற்று கொடுத்து எமது எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புதலே எனது நோக்கம்
என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here