வந்த பணத்தை திருடிவிட்டு, மிகுதிப் பணத்தை திருப்பியனுப்பினார்கள்!

மக்களின் அபிவிருத்திக்காக வந்த பணத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் திருடியதுடன் மிகுதிப் பணத்தை திறைசேரிக்கு திருப்பி அனுப்பியமையினாலேயே வடக்கில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வில்லை என குற்றம் சாட்டியுள்ள சுயேட்சை வேட்பாளர் முருகேசு சந்திரகுமார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமையினால் இளைஞர்கள் இன்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலிருந்த வடமாகாணசபைக்கு மக்கள் அபிவிருத்திக்காக கோடிக்கணக்கான பணம் வந்தது.அதனை கூட்டமைப்பினர் திருடியதுடன் மிகுதிப் பணத்தை திறைசேரிக்கு திருப்பி அனுப்பினார்கள்.

இதனால் வடக்கில் எதுவித அபிவிருத்திகளும் ஏற்படவில்லை.வேலைவாய்ப்புகளும் உருவாக்கிக் கொடுக்கப்பட வில்லை.இதனால் ஏராளமான இளைஞர்கள் தொழிலை இழந்து இன்று சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்மை காரணமாக வாழ்க்கையை இழந்து நிற்கின்றனர்.குறிப்பாக திருமணங்கள் செய்து கொள்ள முடியாத நிலைமையில் கூட இளைஞர்கள் இருக்கின்றனர்.வடக்கில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப் படவில்லை.

மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களின் அபிவிருத்திக்காக வந்த நிதியினை மோசடி செய்த உடன் மிகுதிப் பணத்தை திருப்பி அனுப்பினார்கள்.வாக்களித்த மக்களுக்காக அவர்கள் எதனையும் செய்யவில்லை.இதனை மக்கள் அறிந்துள்ளனர்.இந்த தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here