1991இல் எந்தக் கனவுடன் வந்திறங்கினேனோ, அதே கனவுடனேயே இப்பொழுதும் வந்துள்ளேன்: நெடுந்தீவில் டக்ளஸ்!

நான் தேர்தலை நோக்கமாக கொண்டு உங்களிடம் வரவில்லை. நீங்கள் எனது மக்கள். நான் உங்களது உறவு என்ற உரிமையோடுதான் உங்களை காண வந்துள்ளேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சயின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நெடுந்தீவு மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இன்று நெடுந்தீவு பிரதேசத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு நடத்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார்.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 1991 ஆம் ஆண்டு மார்கழி 25 ஆம் திகதி இந்த மண்ணில் எந்தக் கனவோடு நான் கால்பாதித்தேனோ அதே எண்ணங்களோடுதான் இன்றும் உங்களை பார்க்க வந்துள்ளேன். அதுமட்டுமல்லாது எனது சிந்தனையும் செயற்பாடுகளும் என்றும் மாறியதும் கிடையாது.

இருப்பினும் கடந்த சில காலங்கள் இங்குள்ள மக்களின் மனங்களில் சில சஞ்சலப்புகள் ஏற்பட்டிருந்தன. ஆனால் இன்றைய உங்கள் வருகையில் அந்த சலசலப்புக்களில் தெளிவு ஏற்பட்டுள்ளதை உணரக்கூடியதாக இருக்கின்றது.

நான் ஒரு தேர்தலை நோக்கமாக கொண்டு உங்களிடம் இன்று வரவில்லை, நீங்கள் என்னுடைய மக்கள் நான் உங்களுடையவன் என்ற உரிமையோடு தான் உங்களை காண வந்துள்ளேன்.

ஆகவே இந்த நெடுந்தீவு மக்களின் பசியையும் அவர்கள் பட்ட அவலங்களையும் போக்கிய வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தந்தவன் என்ற தார்மீக உரிமையுடன் உங்கள் முன் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எனக்கான ஆணையை கோட்டு வந்துள்ளேன்” என்று தெரிவித்தார் .

இந்த சந்திப்பின்போது நெடுந்தீவு பகுதியின் பிரதான அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்களால் அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அவை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – பிரதான வீதி திருத்தம், குடிநீர், சிறப்பான வாழ்வதாதரம் அனைத்தையும் அமைத்து தருவதாகவும் அது மட்டுமன்றி கடல் தண்ணீரை சுத்தமான குடிநீராக மாற்றுவதுடன் இந்த மண்ணில் இருக்கும் முருங்கை கல்லை ஆய்வுக்கு உட்படுத்தி அதனை கொண்டு அழகு சாதனப் பொருள் உருவாக்குவதுடன் அதை பயன்படுத்தி பாரிய வேலைவாய்ப்பு ஒன்றை உருவாக்குவதுடன் இந்த மண்ணில் வாழும் அனைத்து மக்களின் வாழ்வில் ஒளிமயமான வாழ்வை அமைத்து தரப்படுப் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here