கட்டிப்பிடிக்க வந்த சினேகன்: கையெடுத்து கும்பிட்ட மமதி!

‘நீயா நானா கோபிநாத் தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சினேகன், மமதியை கட்டிப்பிடிக்க பயந்து கும்பிடு போட்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்ச்சி போட்டியாளர்கள், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள டிவைடட் நிகழ்ச்சியி பங்கேற்கின்றனர். அதில் பிக் பாஸ் முதல் சீசனில் விறுவிறுப்பை கூட்டிய காயத்ரி, சினேகனும், இந்த சீசனில் முதலாவதாக வெளியேறிய மமதி சாரியும் பங்கேற்கின்றனர்.

டிவைடட் நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில் கட்டிப்புடி வைத்தியத்தை பிக் பாஸ் வீட்டில் கடைப்பிடித்த சினேகன், நிகழ்ச்சி அரங்கிற்குள் வந்ததும் கோபிநாத்தை ஆறத்தழுவினார். அதைத் தொடர்ந்து காயத்ரியை கட்டிப்பிடித்த சினேகன், மமதி சாரியை கட்டிப்பிடிக்க வந்து பின் கையெடுத்து கும்பிட்டார்.

மமதிக்கு பயந்து அப்படி செய்தாரா அல்லது, சினேகன் கட்டிப்பிடிப்பதை விரும்பாமல், மமதியெ முந்திக் கொண்டு கும்பிடு போட்டாரா என்பது இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகும் டிவைடட் நிகழ்ச்சியில் தெரியவரும்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here