நடிகர் விக்ரம் மகன் துருவ் மது போதையில் கார் ஓட்டி விபத்து

நடிகர் விக்ரம் மகன் துருவ் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் ஹிட்டான ’அர்ஜூன் ரெட்டி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துவருகிறார் நடிகர் விக்ரமின் மகன் துருவ். வர்மா என்று  பெயரிட்டுள்ள இந்தப் படத்தை பாலா இயக்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வீடு அருகே சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 ஆட்டோக்கள் சேதமடைந்ததோடு இல்லாமல் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து காரில் இருந்தவர்கள் ஓடிவிட்டனர். ஆனால் வருண் என்பவரை மட்டும்  அங்குள்ளவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது கால் முறிந்துள்ளது.

மது போதையில் இருந்த துருவின் நண்பர் வருண் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து  போலீசார் விக்ரம் மகன் துருவை பிடித்து விசாரித்து வருகின்றனர். காரில் இருந்த அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here