பாடசாலை உதைபந்தாட்ட அணித்தலைவராக இருந்ததால் என்னை எம்.பியாக்குங்கள்: யாழில் வேட்பாளரின் அலப்பறை!

ஒவ்வொரு தேர்தலும் விதவிதமான விசித்திர காட்சிகளை நமக்கு காண்பித்துக் கொண்டேயிருக்கும். இன்னும் என்னென்ன காட்சிகளையெல்லாம் நமக்கு காண்பிக்கப் போகிறதோ என்றுதான் ஒவ்வொரு முறையும் தலையில் அடித்துக் கொள்வோம்.

ஆனால், அதையிட இரத்த அழுத்தம் ஏற்படுத்தும் காட்சிகளும், சம்பவங்களும் அடுத்தடுத்த தேர்தல்களில் நடக்கும்.

இப்படி தமிழ் சமூகத்திற்கு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் “சுவாரஸ்ய“ சம்பவங்கள் இந்த தேர்தலிலும் நடந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வேட்பாளரும் தாம் என்ன செய்தோம், என்ன செய்வோம் என்பதை பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சமூகத்திற்காக கடந்த காலத்தை அர்ப்பணித்து பல்வேறு அமைப்புக்களிலும் போராடிய கடந்த காலத்தை கொண்டவர்களா என்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் யாழ் மாவட்டத்தில் முக்கிய கட்சியொன்றில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் விசித்திரமான விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். பாடசாலை தொடக்கம் கழகம் வரை உதைபந்தாட்ட வீரராக இருந்ததையும், மத்தியஸ்தராக இருந்ததையும் குறிப்பிட்டு, அதனால் வாக்களிக்கும்படி கோரிய விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here