தமிழ் வைத்திய ஜோடிக்கு நேர்ந்த துயரம்!

காலி நெலுவ, தூவிலி எல்லயில் தனது காதலியுடன் நீராட சென்ற தமிழ் வைத்தியர் அண்மையில் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்தவரும், காதலியும் அங்கு நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது, அங்குள்ள கல் ஒன்றின் மீது ஏறி செல்பி எடுக்க முற்பட்ட போது கால் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19ஆம் திகதி மாலையில் இந்த சம்பவம் நடந்தது.

வைத்தியரான நேமிநாதன் ரத்னராஜா மற்றும் அவரது காதலியான வைத்தியர் இருவருமே காலியிலுள்ள இந்த சுற்றலா தலத்திற்கு சென்றனர்.

நேமிநாதன் ரத்னராஜா திருகோணமலை பிரதான வீதியை சேர்ந்தவர். புத்தளம் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் வைத்தியராக பணியாற்றினார். இவரது காதலி வடக்கை சேர்ந்த வைத்தியர். அவர் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரிந்தார். அவர்கள் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகின்றனர்.

நேமிநாதன் வழுக்கி நீர்வீழ்ச்சிக்குள் விழுந்தபோது, உதவிகோரி காதலி கூச்சலிட்டார். அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் பலரிருந்தாலும், உடனடியாக யாரும் உதவவில்லை. அந்த பகுதி கிராமவாசியொருவரே ஓடிவந்து உதவினார்.

அவருக்கு காதலியான வைத்தியர் அவசர முதலுதவி செய்தார். பின்னர் அவர்களின் காரிலேயே அருகிலிருந்த நெலுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் உயிரிழந்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here