வடகொரியாவிற்குள்ளும் நுழைந்தது கொரோனா: அவசர நிலை பிரகடனம்!

கொரோனா தொற்றாளர் என்ற சந்தேத்தில் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, வடகொரியாவில் அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவை ஒட்டிய எல்லை நகராக கேசொங் லொக் டவுன் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமது நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லையென வடகொரியா தெரிவித்து வந்தது.

இந்த நிலையில், தென்கொரிய எல்லையை ஒட்டிய கெசொங் நகரில் கொரோனா அறிகுறிகளுடன் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக வடகொரியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக வடகொரியா அறிவிக்கவில்லை.

எனினும், தொற்று அபாயமுள்ளதாக தெரிவித்து நாட்டில் அவசர நிலைமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கேசொங் நகரம் முற்றிலும் லொக் டவுன் செய்யப்பட்டுள்ளது.

அங்கிருந்து யாரும் வெளியேறவோ, உள்நுழையவோ அனுமதிக்கப்படவில்லை.

சில வருடங்களிற்கு முன் சட்டவிரோதமாக எல்லை கடந்து தென்கொரியாவிற்கு தப்பிச் சென்ற ஒருவர், மீளவும் வடகொரியாவிற்கு திரும்பியிருந்தார். அவரே தொற்று சந்தேகத்துடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here