ஓட்டம் காட்டிய போதைப்பொருள் விற்பனையாளன்; பிடிபட்டதும் அயல்வீட்டுக்குள் வீசினான்: சாவகச்சேரியில் சம்பவம்!

யாழில் போதைப்பொருளுடன் ஓட்டம் காட்டிய இளைஞனை பொலிசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.

சாவகச்சேரி நகரத்தில் இன்று (25) பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது.

போதைப்பொருளுடன் வந்த இளைஞன் ஒருவர், பொலிசாரை கண்டதும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். அவரை குறிவைத்து நின்ற சிவில் உடை பொலிசார், இளைஞனை விரட்டினார்கள்.

சாவகச்சேரி வைத்தியசாலையின் பின்புறம்- காளி கோயில் வீதியில், மறுமுனையால் வந்த போக்குவரத்து பொலிசார், இளைஞனை மடக்கிப் பிடித்தனர்.

பொலிசாரிடம் சிக்கியதும், போதைப்பொருளை அயல்வீட்டுக்குள் இளைஞன் வீசியெறிந்தார். எனினும், துரிதமாக செயற்பட்ட பொலிசார், ஆட்களற்ற அயல்வீட்டுக்குள் நுழைந்து போதைப்பொருளை மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here