இலங்கையின் முதலாவது குழந்தை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: யாழ் சிறுமி நலம்!

இலங்கையின் முதலாவது குழந்தை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ராகம பொது வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான வைத்திய நிபுணர் ரோஹன் சிறிவர்தன இந்த தகவலை வெளியிட்டார்.

யாழ்ப்பாணம், மூளாயை சேர்ந்த 9 வயதான எஸ்.சி.கிஷானி என்ற சிறுமிக்கே இந்த சிகிச்சை நடத்தப்பட்டது.

அவரது தாயாரின் கல்லீரலில் 35 வீதமான பகுதி, மகளிற்கு நன்கொடையளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் பின் சிறுமி பூரண நலத்துடன் இருக்கிறார்.

ராகம மருத்துவ பீடம் மற்றும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை இணைந்து 2011 இல் நிறுவப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவில் 50 வெற்றிகரமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதுபோன்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய சுமார் 15 இலட்சம் ரூபா வரை செலவாகும், இலங்கையில் இந்த அறுவை சிகிச்சையை முற்றிலும் இலவசமாக செய்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here