ரெலோவின் கீழ் இரகசிய துணை ஆயுதக்குழு இயங்குகிறதா?

ரெலோ அமைப்பிலிருந்து அண்மையில் கணேஷ் வேலாயுதம் விலகினார். ரெலோவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்ததற்கு மறுநாள் அவரது அலுவலகத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்ற இரண்டு தமிழ் இளைஞர்கள், அலுவலகத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த சமயத்தில் தனது உதவியாளரை கணேஷ் வேலாயும் அழைத்துள்ளார். எனினும், உதவியாளரை தொலைபேசில் பேச அனுமதிக்காத அந்த இரண்டு மர்ம மனிதர்களும், கணேஷ் வேலாயுதம் குறித்து எச்சரிக்கை செய்து விட்டு சென்றனர்.

இதற்கு மறுநாள் மட்டக்களப்பில் உள்ள சிவன் பவுண்டேஷன் நிறுவன அலுவலகம்  இனம்தெரியாதவர்களால் அடைத்து உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கணேஷ் முறைப்பாடு பதிவுசெய்யவில்லை.

இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைகள் ரெலோ தரப்பிலிருந்து எடுக்கப்பட்டதாகவே கணேஷ் தரப்பு சந்தேகிக்கிறது.

இந்த சந்தேகம் உண்மையானால் ரெலோவிடம் இரகசிய துணை ஆயுதக்குழுக்கள் ஏதாவது செயற்படுகிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here