அட்டன் பிரச்சார கூட்டத்தில் மஹிந்த!

பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) நுவரெலியா, அட்டன் பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதம அதிதியாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களாகிய மருதபாண்டி ராமேஸ்வரன், கணபதி கனகராஜ், நகர சபை, பிரதேச சபை தலைவர்கள்,அதன் உறுப்பினர்கள், இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here