நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்!

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நீர் கொழும்பு சிறைச்சாலையின் அதிகாரி குற்றுப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்ததையடுத்து எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய நீர்கொழும்பு சிறைச்சாலையின் அதிகாரியான பிரசாத் காலிங்க கலுவக்கல என்பவருக்கு நீதி மன்றம் பிடியானை பிறப்பித்திருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் நீர் கொழும்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் அனுருத்த, பிரதான சிறைச்சாலை அதிகாரி உபாலி சரத் பண்டார மற்றும் பதில் சிறைச்சாலை அதிகாரி நிசாந்த சேனாரத்ன ஆகியோருக்கு எதிராகவும் பிடியானை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரசாத் காலிங்க கலுவக்கல அதிகாரி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளதுடன், அத்தியட்சகர் அனுருத்த தனக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று சனிக்கிழமை சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதுடன், இதன்போது நீதிவான் அவரை எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here