கஞ்சாவுடன் சிக்கியவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பொதிகள் மீட்பு!

மன்னார் சின்னக்கருசல் பகுதியில் சுமார் 6 கிலோ கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளுடன் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (21) இரவு மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் போது குறித்த நபர் மன்னார் பகுதியில் பதுக்கி வைத்திருந்த மேலும் ஒரு தொகுதி கேரளா கஞ்சா பொதிகளை நேற்று வெள்ளிக்கிழமை(23) மாலை மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்கவின் அறிவுரையின் பேரில் மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி கிருசாந்தனின் வழிகாட்டலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் குமார தலைமையிலான குழுவினர் சின்னக்கருசல் பகுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது மூன்று பொதிகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 கிலோ 90 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளை மீட்டனர்.

மேலும் குறித்த கஞ்சா பொதிகளை தனது உடமையில் வைத்திருந்த குறித்த கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்கு அமைவாக மன்னார் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 கிலோ 325 கிராம் கேராளா கஞ்சா நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளது .

குறித்த சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா அனைத்தும் மேலதிக விசாரணையின் பின் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்க மேற்கொள்ளபட்டுள்ளது.

சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here