13வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்றவர் மயிரிழையில் காப்பாற்றப்பட்டார்!

சிங்கப்பூரில் 13வது மாடியில் பதற்றத்துடன் நின்ற இந்திய ஊழியரொருவரை சக ஊழியர் ஒருவர் இழுத்து செல்லும் கானொலி வெளியாகியுள்ளது.

பதற்றத்துடன் நின்ற இந்திய தொழிலாளி தற்கொலை செய்யும் நோக்கத்துடன் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எண் 506 பழைய சுவா சூ காங் வீதியிலுள்ள சுங்கை தெங்கா லொட்ஜின் 13வது மாடியில் இந்த சம்பவம் நேற்று (24) நடந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளி ஒன்றில், இளைஞர் ஒருவர் மொட்டை மாடி விளிம்பில் இருப்பதையும் இருவர் ஓடி வந்து அவரை பாதுகாப்பான இடத்துக்கு இழுத்துச் செல்வதையும் காண முடிந்தது.

அவர் தற்கொலைக்கு முயன்றபோது, காப்பாற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

மன நலம் (பராமரிப்பு மற்றும் சிகிச்சை) சட்டத்தின் 7வது பிரிவின் கீழ், 19 வயதான அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் சிங்கப்பூர் வந்தவர்.

இந்த சம்பவம் நடப்பதற்கு 3 மணித்தியாலங்களின் முன்னர், அந்த விடுதியில் இன்னொரு இந்திய தொழிலாளி தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

சுங்கை தெங்கா லொட்ஜில் 13 மாடிகளைக் கொண்ட 10 கட்டடங்களில் சுமார் 25,000 ஊழியர்கள் வசிக்கும் இடவசதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here