விடுதலைப் புலிகளின் அனுசரணையுடனேயே ஜேவிபி வடக்கு கிழக்கை பிரித்தது: தமிழ் அரசு கட்சி செயலாளர் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

2006இல் உயர்நீதிமன்றத்தில் வடக்கு கிழக்கு பிரிப்பு வழக்கை, விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன்தான் ஜேவிபி தாக்கல் செய்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரை வைத்துக்கொண்டு, மிகப்பெரிய போராட்டத்தை உடைத்தார்கள் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெறும் அபிவிருத்தி என்கிற மாயையில் நாங்கள் இந்த நாட்டில் எமது இருப்பை இழந்து நாட்டிலே நாம் வாழ முடியாது. மிகவும் வேடிக்கையான ஒரு விடயத்தை சொல்கிறார்கள். கிழக்கு தமிழர்களின் இருப்பை பாதுகாக்க கிழக்கிலேயுள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றாக வேண்டுமென்ற முயற்சியை எடுத்தார்கள். ஆனால் அவர்கள் தமக்குள் கூட ஒற்றுமையை ஏற்படுத்த முடியாதவர்களாக ஆகி விட்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இந்த முன்மொழிவை வைத்த போது மறுத்தோம். இணைந்த வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பை பாதுகாக்கக் கூடிய விதமாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றுதான் தமிழர்களிற்கு விடிவு தரக்கூடியது. ஆகவே, அதில் இணைந்து செயற்படுங்கள் என்றோம். ஆனால் அவர்கள் மறுத்தார்கள். அவர்கள் தமக்குள் கூட ஒரு அணியை ஏற்படுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எவ்வாறு கிழக்கு தமிழர்களின் உரிமையை காப்பாற்ற முடியும்?

மிகப்பெரிய போராளி இயக்கமான விடுதலைப் புலிகளை உடைத்தவர்கள் யார்? தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரை வைத்துள்ள இவர்கள்தான், அந்த மிகப்பெரிய இயக்கம் உடைய காரணமானவர்கள். இவர்களது அனுசரணையுடன்தான் இலங்கை ரசு தமிழர்கள் மீது மிகப்பெரிய இனப்படுகொலையை அல்லது வீரயுகத்தை அழித்தார்கள்.

இவ்வாறு அழிக்கப்பட்டதால்தான் 2006இல் உயர்நீதிமன்றத்தில் வடக்கு கிழக்கு பிரிப்பு வழக்கை கொண்டு செல்லும் தைரியம் ஜேவிபிக்கு ஏற்பட்டது. இதை ஜேவிபி மட்டும் செய்யவில்லை. இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் அனுசரணையாக செயற்பட்டனர்.

கிழக்கை பிரித்ததால் என்ன நடந்தது? இணைந்த வடக்கு கிழக்கில் இருந்த தமிழ் மக்களின் விகிதாசாரம் குறைந்து விட்டது. அதனால்தான் கிழக்கில் முஸ்லிம்கள் தமது விகிதாசாரத்தை உயர்த்திக் கொண்டுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சு பதவிகள் தொடர்பில் எதிர்மறையான கருத்தை தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரம் என்பதால் துரைராசசிங்கம் அறிந்தே பொய் சொல்லியுள்ளார். தமிழ் அரசு கடசியின் கடந்த மத்தியகுழு கூட்டங்கள் 3 இல், அமைச்சு பதவியை ஏற்க வேண்டுமென முதலாவது ஆளாக துரைராசசிங்கமே முன்மொழிவை செய்திருந்ததை தமிழ்பக்கம் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தது.

எனினும், தேர்தல் மேடையில் அறிந்தே அவர் பொய் சொல்லியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here