வைத்தியசாலையிலிருந்து தப்பிய கொரோனா நோயாளி சிக்கியது இப்படித்தான்!

இன்று காலை ஐடிஎச் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கொரொனா நோயாளியை கண்டுபிடிக்க உதவிய கொழும்பு தேசிய மருத்துவமனையின் ஊழியர்களுக்கு சிறப்பு வெகுமதிகள் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனரத்ன தெரிவித்தார்.

மருத்துவமனை ஊழியர் ஒருவர், நோயாளியை முதலில் மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவிற்கு அருகில் கண்டார்.

உணவகத்திற்கு சென்றுகொண்டிருந்த இரண்டு ஊழியர்களிடம் அவர் அந்த நபரை பற்றி தெரிவித்தார்.

உடனடியாக அவரை ஒரு இடத்தில் தடுத்து வைத்தனர்.

அந்த பகுதிக்குள் பொதுமக்கள் நுழைவதை தடுக்க, பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டது. இராணுவத்தினரும், பொலிசாரும் தலையிட்டு அந்தப்பகுதியில் யாரும் நுழையாமல் தடுத்தனர்.

பின்னர், பாதுகாப்பு ஆடை அணிந்திருந்த தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு தாதியர்கள் வந்து நோயாளிக்கு பாதுகாப்பு உடையை வழங்கினர்.

நோயாளி கொழும்பு கோட்டை பகுதியிலிருந்து முச்சக்கர வண்டியில் தேசிய மருத்துவமனைக்கு வந்திருந்தார். AAM 5970 இலக்க முச்சக்கர வண்டியில் தேசிய வைத்தியசாலையின் 6வது வாயிலிற்கு வந்துள்ளார்.

அவரை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி சாரதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனா நோயாளி தப்பித்த பின்னர் அவருடன் தொடர்பு கொண்டவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here