10 முறை தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி: 11வது முயற்சி… தாயார் மனதை கல்லாக்கி எடுத்த முடிவு!

அவுஸ்திரேலியாவில் இரண்டு மாதத்தில் 10 முறை தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி, 11வது தடைவை தற்கொலை முயற்சியில் படுகாயமடைந்தார். அவர் உயிர்பிழைக்க மாட்டார் என வைத்தியர்கள் கைவிரித்த நிலையில், தாயாரே வெண்டிலேட்டரை நிறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் மெரோன் சேவேஜ். இவரது மகள் கேடே (13). இவர் வீதியில் சென்ற கார் முன்னால் போய் விழுந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவர் படு காயமடைந்தார்.

பின்னர் கேடே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அவர் வென்டிலேட்டரில் வைக்கபட்டுள்ளார். அவர் இறந்துவிடுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மனதை கல்லாக்கி கொண்டு அதை அணைக்க ஒத்து கொண்டார் மெரோன். இதையடுத்து சிறுமி கேடே உயிர் பிரிந்தது.

இது குறித்து மெரோன் கூறும் போது :-கடந்த 2 மாதத்தில் மட்டும் என் மகள் 10 முறை தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 11வது முறை முயற்சியில் உயிரிழந்து விட்டாள். பெர்த்தின் மனநல அமைப்பு தான் என் மகள் வாழ்க்கையில் தோல்வியடைய காரணம் என்பேன்.

16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு பொது சுகாதார உள்நோயாளி பராமரிப்பு மனநல சிகிச்சை வசதி இல்லை. அவளுக்கு தற்கொலை எண்ணம் எப்போதும் வந்து கொண்டே இருந்தது. சம்பவத்தன்று செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் இடத்துக்கு நானும் கேடேவும் சென்றோம். அவளுக்கு செல்லப்பிராணிகள் என்றால் அலாதி பிரியம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here