அராலித்துறை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு டக்ளஸ் தீர்வு!

குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான நீர்த்தாங்கி இன்மையால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த அராலித்துறை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீர்த்தாங்கிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

கடந்த 17.07.2020 அன்று அராலித்துறை மக்களை சென்று சந்தித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது அப்பகுதி மக்கள் தமது பகுதிக்கு குடிநீர் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன் அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இதனடிப்படையில் இன்றையதினம் அப்பகுதி மக்களின் தேவைப்பாடுகளை நிறைவுசெய்யும் வகையில் 6 நீர்த்தாங்கிகள் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நீர்த்தாங்கிகளை கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் அப்பகுதி மக்களிடம் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here