சாரா இந்திய புலனாய்வு அமைப்பின் இரகசிய ஏஜெண்டா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இந்திய புலனாய்வு அமைப்பிற்கு புலஸ்தினி ராஜேந்திரன் (சாரா ஜெஸ்மின்) தகவல் வழங்கினாரா என்பது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக அரச புலனாய்வுத்துறை முக்கியஸ்தர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்

கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவரின் மனைவியான, மட்டக்களப்பை சேர்ந்த சாரா, சாய்ந்தமருது வெடிப்பில் உயிரிழந்து விட்டதாக முன்னர் கூறப்பட்ட போதும், அவர் கடல்வழியாக தப்பிச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

புதன்கிழமை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் அவர் சாட்சியமளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்திய புலனாய்வு அமைப்பிற்கு தாக்குதல் வழங்கியது, தன்னை அடையாளம் காட்ட விரும்பாத சஹ்ரான் குழுவின் அங்கத்தவர் என அவர் தெரிவித்தார்.

2019 ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருது தாக்குதலில் சாரா கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட போதும், அவர் 2019 செப்ரெம்பரில் கடல்வழியாக தப்பிச் சென்றார் என கருத போதுமான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

சாராவிடம்இரண்டு தேசிய அடையாளங்கள் உள்ளன. புலாஸ்தினி ராஜேந்திரன், மற்றொன்று சாரா ஜெஸ்மின் என்ற பெயர்களில் அடையாள அட்டைகள் பெறப்பட்டன.

சாய்ந்தமருது தாக்கதலில் சாரா உயிரிழககவில்லையென அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 26 ஆம் திகதிக்குப் பிறகு சாராவை உயிருடன் பார்த்தவர்கள் எஸ்ஐஎஸ் தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.

“இந்த அறிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் (என்.எஸ்.சி) விவாதிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியும்” என்று சாட்சி கூறினார்.

ஏப்ரல் 09 மற்றும் 20 ஆகிய திகதிகளில் தாக்குதல்கள் குறித்து ஒரு வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு அரச புலனாய்வுத்துறைக்கு தகவல்களை வழங்கியிருக்கிறதா என்று ஆணைக்குழு தலைவர் சாட்சியைக் கேட்டார். “அந்த புலனாய்வு அமைப்பிற்கு இதுபோன்ற குறிப்பிட்ட தகவல்களை யார் வழங்கியிருக்க முடியும்?” அவர் கேட்டார்.

சஹ்ரானின் உள் வட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே உடனடி தாக்குதல்களை அறிந்திருக்க முடியும் என்று சாட்சி கூறினார். மூத்த தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்கள் கூட தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருக்கவில்லை.

“தாக்குதல்களில் பங்கேற்றவர்களைத் தவிர, சஹ்ரானின் மனைவியும், நௌபர் மௌலவியும் தாக்குதல்களைப் பற்றி அறிந்திருந்தனர். இருவரும் காவலில் உள்ளனர்” என்று சாட்சி கூறினார்.

ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர், இந்த நடவடிக்கைக்குப் பின்னர் இந்திய புலனாய்வு அமைப்பு தனது முகவரை பாதுகாப்பாக பிரித்தெடுத்திருக்குமா என்றும் சாட்சியிடம் கேட்டார்.

அவர்கள் ஒரு பயங்கரவாத அமைப்பில் செயற்பாட்டாளரை செருகியிருந்தால், அந்த நபரை ஆபரேஷனுக்குப் பிறகு பாதுகாப்பாக பிரித்தெடுக்கும் திட்டமும் அவர்களிடம் இருக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.

“நாங்கள் ஆபரேஷன் செய்திருந்தால், அந்த நபரை பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்வதற்கான திட்டங்கள் எங்களிடம் இருக்கும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here