ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து கொரொனா நோயாளி தப்பியோட்டம்: தகவல் தெரிந்தால் உடனே வழங்கவும்!

முல்லேரியா ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு கொரோனா நோயாளி இன்று (24) காலை மருத்துவமனையில் இருந்து தப்பியோடி விட்டார்.

போதைக்கு அடிமையான சந்தேக நபர் கந்தக்காடு மறுவாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கொரொனா தொற்றிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தார்.

திருகோணமலை, வல்லிபுரம் பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான எல்சியாம் நசீம் என்பவரே தப்பியோடினார்.

அவரது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடந்து செல்லும் போது அவர் நொண்டியடி நடப்பார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பான தகவல்களுக்கு 119 அல்லது 071-89 591 017, 071-85 592 290, 071-8511 864 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் பொலிசார் கேட்டுக்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here