சிறார்களையும் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினாரா கூட்டமைப்பு வேட்பாளர்?

யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்

ரெலோ அமைப்பின் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் யாழ்மாவட்டத்தில் போட்டியிடும் சுரேன் குருசாமியின் படம் பொறிக்கப்பட்ட வாகனம் நேற்று (23) மாலை வட்டுக்கோட்டை பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மையில் வாகனம் மடக்கப்பட்டது.

அவரது பிரச்சார வாகனத்தில் இருந்த 17 வயது சிறுவன், 18 வயதான 4 பேர், மற்றும் முதியவர் ஒருவர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகனத்தில் இருந்து சுரேன் குருசாமியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் மீட்கப்பட்டன.

வேட்பாளர் பயணம் செய்யும் வாகனத்தில் மட்டுமே, அவரது உருவப்படம் பொறிக்கலாமென்பது தேர்தல் விதியாகும். அது மீறப்பட்டதுடன், சிறார்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்களா என்ற கேள்வியெழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here