கூட்டமாக வந்து திகாவுடன் இணைந்த எதிரணியினர்!

மக்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்ட இளைஞர்களால் மாத்திரமே மலையகத்தின் தலைமைதுவத்தை வகிக்க முடியும். மலையகம் எதிர்வரும் காலங்களில் இளைஞர்களின் கைகளில் இருக்க வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

முத்தையா பிரபாகரன் ஆதரவாளர் 300 பேரும் இலங்கை தொழிலாளர் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்கள் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கி ஹட்டனில் ஒன்றினைந்த நிகழ்வில் கலந்து கொண்டு நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த ஊடகவியாலளர் சந்திபில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எம்.உதயகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன், நோர்வுட் பிரதேச சபை உறுப்பினர் எம்.ராம், இலங்கை தொழிலாளர் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்கள் பொன்னுசாமி ஞானசேகரம், எம்.சஞ்சித் எடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பழனி திகாம்பரம், இன்று மாற்று காட்சியினை சார்ந்த இளைஞர்களும் இரண்டு வேட்பாளர்களும் எம்மோடு கைகோர்த்து எமது வெற்றிகாக பாடுபடுகிறார்கள்.

நாம் நான்கரை வருட காலமாக மேற்கொண்ட வேலைத்திட்டத்தினை அச்சு ஊடகத்தின் ஊடாக மக்களுக்கு நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். மலையக மக்களின் உரிமை தொடர்பான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்திருக்கின்றோம். நாளுக்கு நாள் எமக்கு இளைஞர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இம்முறை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெறுவது உறுதியாகிவிட்டது.

மலையகத்தில் சிலர் மதுபான போத்தல்களையும் பணத்தையும் வழங்கி மக்களுடைய வாக்குகளை தட்டிசெல்ல முயற்சி செய்கின்றனர். ஆனால் எமது இளைஞர்கள் மதுபானத்திற்கு அடிமையாக மாட்டார்கள் மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டதால் தான் மக்களுக்கு சேவை செய்யகூடிய வாய்ப்பு எமக்கு கிடைத்தது.

சின்னம் என்பது பெரிய விடயமல்ல மக்களின் எண்ணம் என்பதே முக்கியம். மலையக மக்கள் சின்னம் குறித்து நன்றாக அறிந்தவர்கள். அந்த வகையில் இம்முறை மலையக மக்கள் தொலைபேசி சின்னத்திற்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள். எனது வேலைத்திட்டங்களை மலையக இளைஞர்கள் அறிந்து கொண்டதாலயே எமக்கு மலையக இளைஞர்கள் ஆதரவு வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here