திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பம்: வகுப்பு நேரத்தில் மாற்றம்!

பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (27) மீள ஆரம்பிக்கவுள்ள நிலையில், கல்வி நடவடிக்கைகள் மாலை 3.30 மணி வரை மேற்கொள்ள கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகுப்புக்கான ஆசிரியர்கள் தவிர்ந்த வேறு ஆசிரியர்கள் பாடசாலைக்கு வர வேண்டிய அவசியமில்லையெனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்த புதிய சுற்றறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகுமென கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் திங்கட்கிழமை 11, 12, 13ஆம் வகுப்புக்கள் மாத்திரமே ஆரம்பிக்கவுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி ஏனைய அனைத்து வகுப்பு கல்விச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கின்றன.

இதற்கான சுற்றறிக்கையே வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here