நடிகை வனிதாவின் புகாரால் கைதான சூர்யா தேவி விடுதலை!

நடிகை வனிதா விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் கைதான சூர்யா தேவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமாா் கடந்த மாதம் பீட்டா் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டாா். அவரது மனைவி, தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக பீட்டா் பால் மீது வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உடனே புகாா் அளித்தாா்.

இதையடுத்து வனிதா விஜயகுமாரும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும் பேட்டிகளில் ஒருவரையொருவர் விமரிசித்துக்கொண்டார்கள். வனிதா விஜயகுமாரின் திருமணம் தொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்ற திரையுலகினரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் வனிதாவின் நடவடிக்கைகளைப் பலரும் விமரிசித்துள்ளார்கள்.

இதனால், சமூக ஊடகங்களில், தன்னைப் பற்றி அவதூறு தகவல் வெளியிட்ட சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வனிதா விஜயகுமாா் சென்னை போரூா் எஸ்.ஆா்.எம்.சி. காவல் நிலையத்தில் புகாா் செய்தார். வனிதா மீது சூர்யா தேவியும் புகார் அளித்தார்.

இதற்குப் பிறகு வனிதாவை விமரிசித்து வந்தார் சூர்யா தேவி. இதையடுத்து நேற்றிரவு சூர்யா தேவியை வடபழனி மகளிர் காவல்துறையினர் கைது செய்தார்கள். பெண்ணை ஆபாசமாகத் திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கைதான சூர்யா தேவி ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டார்.

நடிகை கஸ்தூரியின் முயற்சியின் மூலம் ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளது தெரிய வந்துள்ளது. தனது வழக்கறிஞர் மூலமாக சூர்யா தேவி ஜாமீனில் வெளிவந்ததாகவும் அவருடைய குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் ட்விட்டரில் கஸ்தூரி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here