38 நாட்களில் 20,371 பேர் போதைப்பொருளுடன் கைது!

125 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இன்று காலை புத்தளத்தில் கைது செய்யப்பட்ட கலால் அதிகாரியை இடைநீக்கம் செய்ய கலால் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

கலால் துறை துணை ஆணையாளர் செய்தித் தொடர்பாளர் கபில குமாரசிங்க கருத்து தெரிவித்தபோது, சம்பந்தப்பட்ட கலால் அதிகாரி நிரந்தர கடமையில் இல்லை. தகுதிகாண் காலத்தில் பணியாற்றினார் என்று கூறினார்.

இந்த அதிகாரி கடந்த ஆண்டு கெப்பிட்டிக்கொலாவ கலால் நிலையத்தில் இணைக்கப்பட்டு மீண்டும் வவுனியா கலால் நிலையத்தில் பணிபுரிந்தார் என்ம், வவுனியா கலால் அதிகாரசபைக்கு வெளியே எந்த கடமைகளையும் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை என்றார். சந்தேகநபர் 19 ஆம் திகதி முதல் சுகவீன விடுப்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூன் 16 ஆம் திகதி முதல் இன்று (23) மதியம் 12.30 வரை 38 நாட்களில் 20,371 சந்தேக நபர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். ஹெரோயின் போதைப்பொருளுடன் 11,480 சந்தேக நபர்கள், கஞ்சாவுடன் 8,229 சந்தேகபர்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 662 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 14 கிலோ ஹெரோயின், 695 கிலோ கஞ்சா மற்றும் 04 கிலோ ஐஸ் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் 716,000 லிட்டர் சட்டவிரோத மதுபானங்களுடன் 19,107 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here