மஸ்கெலிய பிரதான சாலையில் விபத்து: ஒருவர் கவலைக்கிடம்!

மஸ்கெலிய  சாமிமலை பிரதான சாலையில் இன்று (23 ) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில்  ஒருவர் பாதிப்புக்குள்ளானார்.

மஸ்கெலியாவிலிருந்து  சாமிமலை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்றுடன்   காட்மோர் பகுதியில் இருந்து மஸ்கெலியாவை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுபாட்டை இழந்து முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய  இளைஞர்  ஆபத்தான நிலையில் கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்

இந்த விபத்து காரணமாக அவ்வழியான போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டது.

விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-சாமிமலை ஞானராஜ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here