புதிய தேசிய பிறப்பு சான்றிதழின் மாதிரி!

பிறப்புச்சான்றிதழானது இனிவரும் நாட்களில் தேசிய பிறப்புச் சான்றிதழ் என்றே அழைக்கப்படும் என்று பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பிறப்புச்சான்றிதழில் இருந்த குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலேயே புதிய பிறப்புச்சான்றிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இவ்வாறு புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பிறப்புச்சான்றிதழில் தாய் – தந்தையரின் திருமண விவரம் உள்ளடக்கப்படாது.

அதேவேளை, நாட்டின் அனைத்து குடிமக்களின் புதிய பிறப்புச் சான்றிதழ் களில் இலங்கையர் எனக் குறிப்பிடப்படும். எனவே, புதிய பிறப்புச்சான்றிதழில் இனம் மற்றும் மதம் சார்ந்த தரவுகள் உள்ளடக்கப்படாது. தாய், தந்தையரின் தேசிய இனம் பற்றிய தரவுகள் உள்ளடக்கப்படும்.

சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் தேசிய பிறப்புச்சான்றிதழ் மக்கள் மயப்படுத்தப்படும்.

பிறக்கும்போது கொடுக்கப்பட்ட அடையாள எண் உள்ளிடப்பட்டு, டிஜிட்டல் முறையில் மிகவும் பாதுகாப்பான காகிதத்தில் பதப்படுத்தப்படுகிறது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here