குருநாகல் புவனேகபாகு அரசவைக்குள் நுழைய தடை!

வரலாற்று சிறப்புமிக்க புவனேகபாகு அரச சபை கட்டிடத்தினை பாதுகாக்கவும் அதற்குள் பிரவேசிக்க தடை விதிக்கும் கட்டளை ஒன்றை குருணாகலை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்டமா அதிபர் பெற்றுக் கொண்டுள்ளார்.

அதனடிப்படையில் குருணாகலை நகர சபை தலைவர் துஷார சஞ்சீவ, நகர சபை உறுப்பினர்கள், நகர சபை ஆணையாளர், நகர சபையின் பொறியியலாளர், நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் அரச சபை கட்டிடத்தினை பாதுகாக்கவும் அதற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை விரிவுப்படுத்துமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கியிருந்தார்.

பொலிஸ் மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து சட்டமா அதிபரினால் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here