நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்

டெங்கு அதிகரிப்பை முன்னிட்டு சிரமதானத்தை அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது இன்று(23) காலை குறித்த பிரதேச செயலகத்தில் உள்ள சமூர்த்தி பிரிவு, சமூக சேவை பிரிவுகளை அண்டிய பகுதிகளில் சமூர்த்தி பயனாளிகள் பொதுமக்கள் இணைந்து குறித்த சிரமதானத்தை முன்னெடுத்தனர்.

குறிப்பாக கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக உரிய பராமரிப்பின்றி காணப்பட்ட பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழலில் தேங்கி கிடந்த திண்மக்கழிவுகள் காடுமண்டிக்கிடந்த பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டு எரியூட்டப்பட்டன.

மேலும் குறித்த சிரமதான நிகழ்வானது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ.ரங்கநாதன் வழிகாட்டலில் கே.யோகேஸ்வரன் சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம் கண்காணிப்பில் சிறப்பாக நடைபெற்றது.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here