பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நாளை சுகயீன விடுமுறை!

தொழிற்சங்க பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் நாளை சுகயீன விடுமுறையை அறிக்கையிட தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமது கடமைகளைச் செய்வதற்குத் தேவையான சட்ட அதிகாரம் வழங்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா உள்ளிட்ட தொற்று நோய் கட்டுப்பாட்டு கடமைகளில் இருந்து விலகி வருகின்றனர்.

நிலைமை தொடர்பாக தமது சங்கம் நாளை காலை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தும் என்றும், எதிர்கால நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here