ஆயுதமேந்திய புலிகளால் நாம் விரட்டப்பட்டபோது டக்ளஸ் மட்டுமே உதவினார்: முஸ்லிம் சமூகம்!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்நா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை ஆதரிக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட முஸ்லீம் கிளை தலைவர் எம்.ஆர்.நௌசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஆர்.நௌசாத் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஒரு சிறிய தொகையாகத்தான் யாழ்ப்பாணம் இன்று வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். நாங்கள் பலவந்தமாக ஆயுதமேந்திய குழுக்களால் 1990 ஆம் ஆண்டு விரட்டியடிக்கப்பட்டு மீண்டும் 2002 ஆம் ஆண்டு பாதை திறந்த பின்பு குடியமர்ந்தோம்.

அதே போன்றுதான் இங்குள்ள தமிழ் மக்களும் பல துன்பங்களை அனுபவித்து தான் இங்கு இருக்கின்றார்கள்.

அந்த வகையில் எங்களுக்கு வடக்கை பொறுத்த வரையில் அபிவிருத்திதான் எங்களுடைய கொள்கையாக இருக்கின்றது. ஆகவே எங்களுடைய மக்களுக்கு தேவை அபிவிருத்தி. அந்த வகையில் நாங்கள் ஆளுங்கட்சியில் இருந்தால் தான் எங்களுடைய மக்களுக்கான அபிவிருத்தியை கொண்டுசெல்ல முடியும்.

இங்குள்ள முஸ்லீங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு அகதி முகாமில் வாழ்ந்துதான் இப்போது வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு கல்வி, தொழில் மற்றும் வாழ்வாதார விடையங்கள் தேவையாக இருக்கின்றது.

இந்த நாட்டில் சிறுபான்மை சிறுபான்மை என்று சொல்லுவதை நாங்கள் தவிர்த்து கொள்ள வேண்டும். அவ்வாறு சொல்வது எம்மை நாமே இழிவு படுத்துவது போல் இருக்கின்றது. நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள்தான் என சொல்ல வேண்டும்.

இந்த நாட்டின் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டால் தான் எங்களுடைய அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ள முடியும்.

எங்களை ஆயுதம் ஏந்திய புலிகள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றிய பின்னர், புத்தளத்தில் இருக்கும் போது எவரும் எங்களை பார்க்கவில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாத்திரம் 1993 ஆம் ஆண்டு வருகைதந்து தனது சொந்த பணத்தில் தேவா நகர் என்று ஒரு கிராமத்தை உருவாக்கினார் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here