பால் ஏற்றிச் செல்லும் வாகனம் தடம்புரண்டு விபத்து!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் பால் ஏற்றிச்செல்லும் கொள்கலன் ஒன்று இன்றையதினம் காலை விபத்திற்குள்ளாகியது.

மாங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச்சென்ற குறித்த கொள்கலன் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, வாகனத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் கொள்கலனின் சாரதியான கேகாலை பகுதியை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here