வடமராட்சி மீனவர் பிரச்சனை தொடர்பில் டக்ளஸ் தலைமையில் கூட்டம்!

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் வடமராட்சி மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது

இந்தக் கூட்டத்தில் தேர்தல் கண்காணிப்புக் குழு பிரதிநிதிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசம், வடமராட்சி கடற்தொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். பொலிஸாரும் மற்றும் கடற்படையினர் இக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடலட்டை பிடித்தல் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான மீன்பிடிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றைத் தடுக்க கடற்தொழில் அமைச்சர், அதிகாரிகள் தவறியமையைக் கண்டித்து வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசத்துக்கு உள்பட மீனவர்கள் தொழில் புறக்கணிப்பு போராட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here