போதைப்பொருள் வர்த்தகம்: 4 பெண்கள், குழந்தையுடன் சிக்கிய கலால் திணைக்கள உத்தியோகத்தர்; அதிகாரி தலைமறைவு!

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் கலால் திணைக்கள உத்தியோகத்தரும் உள்ளடங்குகிறார். அவர்களிற்கு போதைப்பொருள் விற்பனை செய்த, புத்தளம் பகுதியை சேர்ந்த கலால் திணைக்கள அதிகாரி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார்.

விமானப்படை புலனாய்வு பிரிவு மற்றும் புத்தளம் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இன்று (23) காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 600,000 ரூபாய்க்கு அதிகமான பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

கைதானவர் அநுராதபுரம் பகுதி கலால் திணைக்கள உத்தியோகத்தராவார்.

அவரிடமிருந்து சுமார் 150 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

போதைப்பொருள் வாங்க அவருடன் வந்ததற்காக 5 பெண்கள், இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் அனுராதபுரத்தின் கெகிராவவில் வசிப்பவர்கள்.

அவர்களிடம் போதைப்பொருளை விற்பனை செய்த புத்தளம் கலால் திணைக்கள அதிகாரி, சுற்றிவளைப்பிலிருந்து தப்பித்து, சொகுசு காரில் பறந்து விட்டார்.

புட்டலம்-அனுராதபுரம் வீதியில் சாலியவெவ அருகே இந்த 8 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

தப்பியோடிய கலால் ஆய்வாளரையும் காரையும் கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தற்போது புத்தளம் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடி சில காலமாக நடந்து வருவதாகவும், கைது செய்யப்பட்ட கலால் திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் பிறர் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here