நாளை மறுநாள் நீராவியடி பிள்ளையாருக்கு பொங்கல்: அரசியல் மயப்படுத்தாதீர்கள்; அரசியல்வாதிகளிடம் ஆலய நிர்வாகம் கோரிக்கை!

முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் பொங்கல் விழா நாளை மறுநாள் (24) இடம்பெறவுள்ளது. இந்த பொங்கல் விழாவை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என பிரதேச அரசியல்வாதிகளிடம், ஆலய நிர்வாகத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், பொங்கல் விழாவில் சுகாதார நடைமுறையை பேணி, 50 பேர் மாத்திரமே கலந்து கொள்ள, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் அனுமதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆலய நிர்வாக தலைவர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

நாளை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு கொக்குத்தொடுவாய் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்பட்டு, வழிபாடுகள் இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here