8 வயது பிள்ளைக்கு பலவந்தமாக கசிப்பு பருக்கியதால் வைத்தியசாலையில் அனுமதி!

பலவந்தமாக கசிப்பை புகட்டியதால் 8 வயது சிறுவன் ஒருவர் ஹல்தும்முல்ல மாவட்ட வைத்தியசாலையில் இன்று (22) அனுமதிக்கப்பட்ட பின்னர், பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹல்தும்முல்ல- நீட்வூட் தோட்டத்தைச் சேர்ந்த இந்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் வசிப்பதுடன், தந்தை போதைக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுவனின் மாமா உறவு முறையான ஒருவரைக் கைதுசெய்வதற்காக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here